வீட்டில் எறும்பு தொல்லையா...?

வெள்ளி, 12 ஏப்ரல் 2013 (18:09 IST)
FILE
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய எளிய குறிப்புகள் இதோ...

கிச்சனில் எறும்பு தொல்லையா...?

வீட்டிலும், சமையல் அறையிலும் எறும்புகள் இருந்தால், அவை எங்கிருந்து வருகின்றன என்பதை பார்த்து அங்கு சிறிது petroleum jelly - யை தேய்த்துவிட்டால் எறும்பு தொல்லை இனி இல்லை.

திடீர் வெங்காயச் சட்னி செய்ய...

இட்லிக்குத் தொட்டுக்கொள்ளும் மிளகாய்ப் பொடியுடன் வெங்காயத்தை வெட்டி போட்டு அரைத்தெடுத்தால் திடீர் வெங்காயச் சட்னி தயார். சுவையாகவும் இருக்கும்.

ரசம் மணமாக இருக்க...

கொத்துமல்லியை ஆண்டு முழுவதும் பயன்படுத்த ஒரு வழி, கொத்துமல்லித் தழைகள் உபயோகித்த பின் மிஞ்சிய காம்புகளை புளியுடன் சேர்த்து லேசாக இடித்து வெளியில் காய வைத்து எடுத்துவிட வேண்டும்.கொத்துமல்லி கிடைக்காத காலத்தில் இந்தப் புளியை உபயோகித்து ரசம் வைத்தால் ரசம் மணமாக இருக்கும்.

பீட்ரூட், காரட் வேகவைத்த நீர்...

பீட்ரூட், காரட் வேக வைத்து வடிகட்டும் நீரைக் கீழே கொட்டிவிடாமல் சிறிது சீனியைப் போட்டு ஆறிய பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அந்தக் கிழங்குகளை உண்பதைவிட, நீரைக் குடிப்பதன் மூலம் சத்து அதிகமாகக் கிடைக்கும். சுவையாகவும் இருக்கும். அனைவரும் அருந்தலாம்.

பூசனம் பற்றுவதைத் தடுக்க...

எவ்வளவு பக்குவமாக மாவடு தயாரித்தாலும் பூசனம் பற்றுவதைத் தடுக்க முடிவதில்லை. இதற்கு, வடுமாங்காய் தயாரித்த ஒரு வாரம் கழித்து, அந்த நீரை மட்டும் இறுத்துக் கல் சட்டியில் விட்டு முக்கால் பாகமாகச் சுண்டக் காய்ச்சி ஜாடியில் விட்டு அதில் ஊறிய வடுக்களைப் போட்டு வைத்தால் பூசனம் பிடிப்பதைத் தடுக்கலாம்.

பூண்டு சுலபமாக வேக...

பூண்டை தனித்தனிப் பல்லாகப் பிரித்தெடுத்து வாணலியில் நன்கு வதக்கியபின் உரித்தால் சுலபமாக உரிக்கலாம். பிறகு புளியில் போட்டால் விறைத்துக் கொண்டு சுலவமாக வெந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்