பொதுவாக டிட்டர்ஜென்ட்டால் கழுவினால் மேக்கப் கறைகள் நீங்கும். ஆனால் கறை நீங்கவில்லை என்றால் 5 மில்லி அமோனியாவை 500 மில்லி தண்ணீரில் கலந்து, அதில் துணியை ஊரவைக்க வேண்டும். அதன் பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.
வெண்ணெய்/நெய் கறைகளை நீக்க:
துவைப்பதற்கு முன் கறைபட்ட துணி தாங்கும் அளவிற்கு சூடான நீரில் ஊரவையுங்கள். இப்போது டிட்டர்ஜென்ட்டால் துவைத்தால் கறை நீங்கும்.
ஜாம் கறையை நீக்க:
கறையை உடனடியாகக் கழுவினால் அது நீங்கிவிடும். ஆனால் கறை காய்ந்துவிட்டால் அதை முதலில் பொராக்ஸ் கலவையில் ஊரவைத்து பிறகு டிட்டர்ஜென்ட்டால் கழுவுங்கள். கறை நீங்கும்.
தேவைப்பட்டால் துணியின் தன்மையைப் பொருத்து ப்ளீச் பயன்படுத்தலாம்.
பளிங்கு பொருட்களிலிருந்து கறையை நீக்க:
பேகிங் சோடா, தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறின் கலவையை கறையின் மேல் தடவி நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு கழுவி, உலர்த்துங்கள். இதே கலவையால் குழந்தைகளின் ஸ்லேட்டையும் சுத்தமாக்கலாம்.
மண் கறையை நீக்க:
சில நேரங்களில் மண்ணால் கறை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை முழுவதுமாக நீக்குவது சிரமமானது. முதலில் மண்ணைத் தேய்த்து எடுத்துவிட வேண்டும். பிறகு டிட்டர்ஜென்ட்டால் துணி தாங்கும் அளவு வெப்பமுள்ள நீரால் கழுவ வேண்டும். கறை நீங்கும்.
தேவைப்பட்டால் துவைக்கும் முன் சோப்பால் கறையைத் தேய்த்துக் கழுவலாம்.