முறுக்கு, சீடை தயாரிக்கும்போது...

புதன், 10 ஆகஸ்ட் 2011 (18:37 IST)
முறுக்கு, சீடை தயாரிக்கும்போது...

பஜ்ஜி, பூரி, சப்பாத்தி, முறுக்கு, சீடை போன்றவை தயாரிக்கும்போது கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து கொண்டால் நன்றாக வருவதோடு சுவையாகவும் இருக்கும்.

வெண்ணெய் உருகாமல் இருக்க...

தயிரை ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு, பிறகு மிக்ஸியில் கடைந்தால் வெண்ணெய் திரளும். மிக்ஸியினால் ஏற்படும் சூடு பாதித்தால் வெண்ணெய் திரளாமல் உருகிவிடும். அதனால்தான் ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டியுள்ளது.

சமையலறை பிசுக்காக உள்ளதா...

சமையலறையில் பிசுக்கு இருந்தால் மண்ணெண்ணெய் தொட்டுத் துடைத்தால் நன்றாகப் பளிச்சென்று விட்டுவிடும். ஆனால் சமையலறை ஜன்னல், கிரில் இவற்றில் மண்ணெண்ணெய் படக்கூடாது (பெயிண்ட் உதிர்ந்துவிடும்). வெந்நீரில் சிறிது வாஷிங் சோடாவைப் போட்டு அதைக் கொண்டு துடைத்தால் பிசுக்குப் போகும்.

தயிர் கெட்டியாக இருக்க...

சில வீடுகளில் தயிர் பிசின் போல இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நல்ல சூட்டோடு பாலை ுறை ஊற்றுவதுதான். மிகவும் குளிர்ச்சியாக இல்லாமல், மிகச் சிறிதளவு வெதுவெதுப்பில் ுறை ஊற்றினால் கெ‌ட்டியாக கொழகொழப்பற்ற தயிர் கிடைக்கும்.

பால் காய்ச்சும்போது...

தற்போது வரும் பாக்கெட் பால் எற்கனவே உயர்ந்த உஷ்ணத்தில் பதப்படுத்தப்பட்டுக் குளிர்விக்கப்படுகிறது. எனவே, பால் பொங்குமளவுக்கு அதை நாம் காய்ச்ச வேண்டிய அவசியமே இல்லை. மேற்பரப்பு சுருங்க ஆரம்பித்தவுடனேயே பாலை அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும். இல்லாவிட்டால், தயிர் தோய்க்கும் போது கொழகொழப்பாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்