செவ்வாய், 19 அக்டோபர் 2010 (13:36 IST)
நிறைய வீடுகளைப் பார்த்திருப்போம். மற்ற அறைகளுக்கு ஒதுக்கும் இடத்தை விட சற்றுக் குறைவான இடத்தையே சமையலறைக்கு ஒதுக்கி இருப்பார்கள்.
இதுபோன்ற வீடுகளில் சமையலறையை அமைப்பது மிகவும் கடினம். சமையலறை என்றால் ஒரு சில அலமாரிகளாவது நிச்சயம் இருந்தே ஆக வேண்டும். அவற்றை எப்படி அமைப்பது என்பதை சரியான முறையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தண்ணீர் வைக்கும் இடமும், துலக்கி வைத்த சாமான்களை வைக்கும் இடமும் நிச்சயம் தேவை. அதற்கேற்ற வகையில் திட்டமிடுங்கள். சமையல் மேடையில் இடம் இருப்பின், தண்ணீரையும், சாமான்களையும் மேடையிலேயே வைத்துக் கொள்ளலாம்.
மேடை சிறியதாக இருப்பின், மேடைக்கு கீழே சிலிண்டர் வைக்கும் இடத்தில் தண்ணீர் குடங்களை வைத்துக் கொள்ளலாம். கைக்கு எட்டும் தூரத்தில் அலமாரியோ அல்ல்து சாமான் கவுக்குகும் இரும்பு டப்பையோ ஆணியில் மாட்டிவிடலாம். இது சிங்குக்கும் அருகில் இருந்தால் துலக்கும் சாமான்களை அதில் போட்டு விட எளிதாக இருக்கும்.