கா‌ர் வா‌ங்குவத‌ற்கு மு‌ன்பு

செவ்வாய், 9 நவம்பர் 2010 (15:57 IST)
கா‌ர் வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று முடிவெடு‌த்து ‌வி‌ட்ட ‌பிறகு நா‌ம் செ‌ய்ய வே‌ண்டிய ‌மிக மு‌க்‌கியமான ‌விஷய‌ங்க‌ள் ‌சில உ‌ள்ளன.

அதாவது காரை வா‌ங்‌கினா‌ல் அதனை ‌நிறு‌த்த ‌வீ‌ட்டி‌ல் அ‌ல்லது அ‌டு‌க்குமாடி‌க் குடி‌யிரு‌ப்‌பி‌ல் இட‌ம் உ‌ள்ளதா எ‌ன்பதை முடிவு செ‌ய்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

சொ‌ந்த ‌வீடு எ‌ன்றா‌ல், கா‌ரை ‌நிறு‌த்த போ‌திய இட‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்ளலா‌ம். காரை ‌நிறு‌த்த போ‌திய இட‌த்தை உருவா‌க்க முடியாத ‌வீடாக இரு‌ப்‌பி‌ன், ‌வீ‌ட்டி‌ற்கு அருகே காரை ‌நிறு‌த்துவத‌ற்கான ஷெ‌ட் ஏதேனு‌ம் உ‌ள்ளதா எ‌ன்று ‌விசா‌ரி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வீ‌ட்டி‌ற்கு‌ள் காரை ‌கொ‌ண்டுவருவத‌ற்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் உ‌ங்க‌ள் ‌வீடு அமை‌ந்‌திரு‌க்கு‌ம் சாலை உ‌ள்ளதா அ‌ல்லது ‌நீ‌ங்க‌ள் காரை எடு‌க்கு‌ம் போது ஒ‌வ்வொரு முறையு‌ம் போ‌க்குவர‌‌த்து பா‌தி‌ப்போ அ‌ல்லது ‌சி‌றிய ச‌ந்தாக இரு‌ப்‌பி‌ன் காரு‌க்கு சேதமோ ஏ‌ற்படலா‌ம்.

கா‌ர் வா‌ங்குவது ம‌ட்டு‌ம் மு‌‌க்‌கியம‌ல்ல, அதை ‌‌நிறு‌த்து‌ம் இடமு‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் காரை ‌விட, காரை ‌நிறு‌த்த அ‌திக செலவா‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்