காபி, டீ கறைகள் பட்டவுடன் சோப்பு அல்லது டிட்டர்ஜெண்ட்டால் கழுவி விடவும். வெள்ளை துணியாக இருந்தால் பிளீச் அல்லது பேகிங் சோடாவை கறையின் மீது தேய்த்து கறைகளை நீக்கலாம்.
சூயிங் கம் கறையை நீக்க:
சூயிங் கம் பட்ட உடையை ஒரு பையில் போட்டு, ஃப்ரீஜரில் ஒரு மணி நேரம் வைக்கவும். இதனால் சூயிங் கம் கெட்டியாகிவிடும். இப்போது இதை எளிதில் உடைத்து எடுத்துவிடலாம்.
எப்போதும் போல் துவைத்து முழுமையாக சுத்தம் செய்துவிடலாம்.
சாக்லேட் கறையை நீக்க:
துணியில் பட்டுள்ள சாக்லேட்டை முதலில் நீக்கவும். பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீரால் கறையை தேய்த்து சுத்தம் செய்யவும். சாக்லேட் கறை மறைந்துவிடும்.
பழக் கறையை நீக்க:
உடனடியாக துவைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பை கறையின் மேல் தேய்த்து கழுவவும்.
காய்ந்த கறைகளை நீக்க க்ளிசரின் (மருந்து கடைகளில் கிடைக்கும்) மற்றும் வெதுவெதுப்பான நீரை சமமான அளவில் கலந்து கறையில் தேய்த்து கழுவவும். அல்லது தண்ணீரில் துணியை ஊரவைத்து, கறையில் உப்பைத் தேய்த்து அதன்பின் கழுவவும்.
லிப்ஸ்டிக் கறையை நீக்க:
சிறிதளவு டூத்பேஸ்ட்டை கறையின் மீது தடவி தேய்த்தால் லிப்ஸ்டிக் கறை மறையும். பிறகு எப்போதும் போல் துணியை துவைக்கலாம்.
அல்லது பெட்ரோலியும் ஜெல்லியால் தேய்த்தும் இந்தக் கறையை நீக்கலாம்.
பீர் கறையை நீக்க:
வினிகருடன் வெதுவெதுப்பான நீரை கலந்து, பீர் கறையின் மேல் தடவவும். சிறிது நேரத்திற்கு பிறகு டிட்டர்ஜேண்ட்டால் துவைக்கவும். கறை நீங்கும்.