இட்லி மிருதுவாக இருக்க

செவ்வாய், 19 ஏப்ரல் 2011 (16:52 IST)
இட்லி மாவில் போதுமான அளவு உளுந்து இல்லையென்றால் இட்லி கெட்டியாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் ஒரு கரண்டி நெய் அல்லது ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பிறகு ஊற்றுங்கள். இட்லி மிருதுவாக இருக்கும்.

இட்லி, தோசைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும் போது கொஞ்சம் பெருங்காயத்தை சேர்த்து அரைத்தால் கமகமவென்று மணமாக இருக்கும்.

இட்லி, தோசைக்கு அரிசி, உளுந்து ஊற வைப்பதற்கு முன்பாகவே தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டு ஊற வைக்கவும். ஊறிய பிறகு அலசினால் அரிசி, உளுந்தில் உள்ள சத்து குறைந்துவிடும்.

ருசியான தட்டைக்கு

சலித்த மைதாவை இட்லி தட்டில் வைத்து வேகவைக்கவும். பிறகு அந்த மாவில் தேவையான அளவு உப்பு, காரப்பொடி, பெருங்காயம் சேர்த்துப் பிசையவும். ஒரு பிடி அளவு கடலைப் பருப்பை நீரில் ஊறவைத்து இத்துடன் சேர்த்துத் தட்டை செய்தால் உண்பதற்கு மொரமொரப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்