உபயோகமுள்ள வீட்டுக் குறிப்புகள்

பேச்சுலர்களுக்கு, வேலைக்கு போகும் பெண்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


 
 
1. தயிர் பழச்சாறுக்கு இணையான சத்துக்கள் உள்ளன.  மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளுக்கு தயிர் சிறந்த மருந்தாகும். தயிரிலுள்ள லேக்டிக் அமிலம் வயிற்றுப்போக்குக்குக் காரணமான கிருமிகளை அழித்து விடும். சூரிய ஒளியால் பாதிக்கப்படும் சருமப் பகுதிகளை தயிர் தனது சத்து மிகுந்த கலவைகளால் பாதுகாக்கிறது.
 
2. வாழைப் பழத்தில் வைட்டமின் ஏ பி சி பாஸ்பரஸ் கந்தகம் இரும்புச்சத்து கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. சிறந்த மலமிளக்கியும் கூட   வாழைப்பழத்தை தினமும் ஒரு வேளை ஆகாரமாகச் சாப்பிட்டு வருபவர்களுக்கு  அறிவுத்திறன் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. மேலும் இது நோய் தடுப்பானதாகவும் செயல்படுகிறது.
 
3. கட்டிப்பெருங்காயம் இறுகிப்போகாமல் நீண்ட நாள் இருக்க வேண்டுமா? பெருங்காயம் வைத்திருக்கும் டப்பாவில் ஒரு பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளிப்போட்டு வைக்கவும் இதனால் பெருங்காயத்தை எளிதில் கிள்ளி எடுக்கவரும். இறுகிப்போகாது.
 
4. நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் லவங்கப்பட்டை மருத்துவ குணம் நிறைந்தது. சளி  இருமல் உடல் பருமன் சர்க்கரை நோய் பல் வலி  மூட்டுவலி தசைவலி இரத்த அழுத்தம் புற்று  நோய் போன்ற நோய்களுக்கும் ஞாபகத்திறன் அதிகரிக்கவும் பயனளிக்கக்கூடியது. அதனால் இதனை சமையலில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
 
5. உடல் எடை குறைவதற்கு சுரைக்காய் ஜூஸ் அரை டம்ளர் தேன் ஒரு ஸ்பூன் கலந்து தினமும் குடித்து வந்தால் நாளடைவில் இரண்டு கிலோவிற்கு மேல் எடை குறையும்.
 
6. ரோஜா இதழ் லவங்கம் எலுமிச்சை தோல் இவற்றை தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை குடித்து வந்தால் இதயம் பலம்பெறும்.
 
7. பூரி பஜ்ஜி போண்டாவிற்கு மாவு கலக்கும்போது சிறிது தரமான ஓம வாட்டர் கலந்து பின் தேவையான தண்ணீரும் சேர்த்துக் கலந்து செய்தால் அஜீரணத் தொல்லைகளை மட்டுப்படுத்தலாம். அடை தோசை மாவிலும் சிறிது ஓமவாட்டர் கலந்து பயன்படுத்தலாம்.
 
8. வீட்டுக்குப் புதிதாக பெயின்ட் அடித்து இருந்தால் பெயிண்ட் வாடை இருந்து கொண்டே இருக்கும். ஒரு வெங்காயத்தை நறுக்கி அறையின் மத்தியில் வைத்து விட்டால் பெயிண்ட் வாடை வீசாது.
 
9. கொட்டை இல்லாத புளி என்றால் கை போட்டுகூட கரைக்க தேவையில்லை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி வடிகட்டினால் புளி கரைசல் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்