பாலை காய்ச்சுவதற்கு முன், அந்த பாத்திரத்தை நன்கு தண்ணீரால் சுத்தம் செய்த பின்னர் காய்ச்சினால், பால் பாத்திரத்தின் அடியில் பிடிப்பதை தவிர்க்கலாம். பால் காய்ச்சும் பாத்திரத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வெயிலில் காய வைக்கவும்.
தினமும் ஒரே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சாமல் இரண்டு பாத்திரங்களை மாற்றி மாற்றி பயன்படுத்துவதும் நல்லது. பாலைக் காய்ச்சும் முன்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து, அந்த நீரை கீழே ஊற்றியதும் பால் காய்ச்சினால் பால் கெடுவதை தவிர்க்கலாம்.