வீடுகளை சுத்தமாக வைக்க

சனி, 24 ஜனவரி 2015 (09:16 IST)
வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தை ஈரத்துணியால் சுத்தம் செய்து விடுங்கள். மேலும் பாத்திரங்களை தற்போது வரும் இரும்பு நாரால் தேய்க்க வேண்டாம். அதனால் பாத்திரங்களில் பெரும் கீறல்கள் விழுந்து பாத்திரம் சீக்கிரம் தேய்ந்து போகும். நமது கைகளும்தான்.
வேலைக்குப் போகும் பெண்கள், ஒரு நாளைக்கு ஒரு அலமாரி என்று கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு வேலைக்கு இடையே சுத்தம் செய்து கொள்வது நல்லது. துணிகளை அடுக்கி வைக்கும் அலமாரிகளில் ரசக்கற்பூரத்தைப் போட்டு வையுங்கள்.
 
அரைத்து வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் அவ்வப்போது வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். 

வெப்துனியாவைப் படிக்கவும்