‌வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் பொரு‌ட்க‌ள்

செவ்வாய், 2 நவம்பர் 2010 (17:08 IST)
உங்கள் பிரிஜ்ஜை வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது துர்நாற்றம் எழாமல் தடுக்கும். அத்துடன், நாற்றம் எழாமல் தவிர்க்க ஒரு சிறு டப்பா பேக்கிங் சோடாவை ‌சி‌றிது நேர‌ம் பிரீசரிலும், ‌சி‌றிது நேர‌ம் கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌‌ட்டி‌யிலு‌ம் திறந்து வை‌க்கலா‌ம்.

தண்ணீர் படக்கூடிய இடங்கள், குளியலறை மறைப்புகள் போன்றவற்றில் ஒருவித பூஞ்சை வளர்ந்து மோசமான தோற்றத்தை ஏற்படுத்தும். அவற்றை `போராக்ஸ் பவுடரை'த் தண்ணீரில் கலந்து சுத்தம் செய்யலாம்.

நீங்கள் ரொட்டி வைத்திருக்கும் ஜாடி, கேக் பெட்டி போன்றவற்றில் ஒரு சிறு `பிரெட்' துண்டை போட்டு வைக்க மறந்து விடாதீர்கள். அது, பேக்கரி வகைகளை `பிரெஷ்' ஆக வைத்திருக்கும்.

வீ‌ட்டி‌ல் சமைய‌ல் பா‌த்‌திர‌ங்களை‌த் தூ‌க்க‌ப் பய‌ன்படு‌த்து‌ம் து‌ணிகளை அ‌வ்வ‌ப்போது மா‌ற்‌றி‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள். ஒரே‌த் து‌ணியை பல மாத‌ங்களு‌க்கு வை‌த்து‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம்.

ஒ‌வ்வொரு நாளு‌ம் இர‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் கே‌ஸ் ‌ஸ்ட‌வ்வை ஒரு முறை உல‌ர்‌‌ந்த து‌ணியா‌ல் துடை‌த்து‌வி‌ட்டு, ‌சி‌றிது தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு துடை‌த்தா‌ல் பு‌திதாகவே இரு‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்