வாடகை வீடு பார்க்கும்போது
வியாழன், 28 அக்டோபர் 2010 (15:55 IST)
வீடு காற்றோட்டமாகவும், சூரிய வெளிச்சம் வருமாறு இருக்கும் வீடாகப் பார்த்து தேர்வு செய்யுங்கள்.
வாடகைப் பணம், முன்பணம் எவ்வளவு என்று மட்டுமே கேட்காமல், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றிற்கும் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள் என்பதை முதலிலேயே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
வீட்டில் குடிநீர், மற்ற பயன்பாட்டிற்கு தேவைப்படும் தண்ணீர் போன்றவை எவ்வாறு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
வாடகையை மாதந்தோறும் எந்த தினத்தில் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுங்கள். நமக்கு 10ஆம் தேதி சம்பளம் என்றால், வாடகைக்கு விடுபவர் 1ஆம் தேதியே வாடகை வந்தாக வேண்டும் என்று கேட்டால் நமது பாடு சிக்கலாகிவிடும்.
அதேப்போல, வீட்டில் பொதுவாகப் பயன்படுத்தும் சில விஷயங்களை எப்படி கணக்கிடுவார்கள் என்றும் கேட்டறிந்து கொள்ளுங்கள்.
வாகனங்கள் நிறுத்த இடம் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.