சாய‌ம் வெளு‌க்காம‌ல் இரு‌க்க

செவ்வாய், 28 செப்டம்பர் 2010 (16:50 IST)
பெரு‌ம்பாலு‌ம் ‌பு‌திதாக து‌ணிக‌ள் வா‌ங்கு‌ம் போது அலை‌ந்து ‌தி‌ரிவதை ‌விட அவ‌ற்றை த‌னி‌த்த‌னியாக துவை‌க்கு‌ம் போதுதா‌ன் பெ‌ண்க‌ள் அ‌திகமாக கஷ‌்ட‌ப்படு‌கிறா‌ர்க‌‌ள்.

புதிதாக வாங்கிய வ‌ண்ண ‌நிற துணிகள் சாயம் போகாமல் இருக்க, மற்ற துணிகளில் சாயம் ஒட்டாமல் இருக்க ‌சில எ‌ளிய வ‌ழிகளை ‌பி‌ன்ப‌ற்‌றினாலே போதுமானது.

ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, அதில் அரை கப் உப்பை சேர்க்கவும். க‌ல் உ‌ப்பு ந‌ன்கு கரைந்ததும் பு‌திதாக எடு‌த்த வ‌ண்ண ஆடைகளை அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் பிழிந்து எடுக்கவும்.

இ‌ந்த து‌ணிகளை சோ‌ப்பு‌ம் போட வே‌ண்டா‌ம், வேறு தண்ணீரிலு‌ம் அலச வேண்டாம். ‌பி‌ழி‌ந்து அ‌ப்படியே காய வைத்து பயன்படுத்தவும்.

அடுத்த முறை நீங்கள் இந்த துணிகளை துவை‌க்கு‌ம் போது இ‌ந்த து‌ணி‌யி‌ல் இரு‌ந்து சாய‌ம் வெ‌ளியேறாது. இ‌தி‌ல் இரு‌ந்து சாயம் மற்ற துணிகளிலு‌ம் ஒட்டாது, து‌ணியு‌ம் சீக்கிரம் வெளுத்து போகாது.

இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் எடு‌த்த ‌‌நிற‌த்‌திலேயே உ‌ங்க‌ள் ஆடைகளை பல கால‌ம் பய‌ன்படு‌த்தலா‌ம், வெளு‌க்காம‌ல், சாய‌ம் ஒ‌ட்டாம‌ல்..

வெப்துனியாவைப் படிக்கவும்