சமையலறைக் குறிப்பு

புதன், 6 ஏப்ரல் 2011 (19:26 IST)
அரிசி, பருப்புகளை ஊறவைத்து வேக வைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.

இரவில் தயிரைக் கடைந்து உபயோகிக்கவும். தயிராக உபயோகிக்கக் கூடாது.

தளிர் புளிக்காமல் இருக்க தயிரில் வரமிளகாய் காம்பைக் கிள்ளிப்போட்ட வைத்தால் புளிக்காது.

பலாக்காய், வாழைத்தண்டு நறுக்கி மோர் கலந்த தண்ணீரில் போடவும். நிறம் மாறாது.

காலி·ப்ளவரை நறுக்கி, உப்புத் தண்ணீரில் போட்டு அலசி, சமையலுக்கு உபயோகப்படுத்தவும்.

பொரியலுக்கு வரமிளகாய், சீரகம், மல்லி வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பொரியலுடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

சமையலில் காரம் அதிகமாக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும். குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.

ரொட்டி டப்பாவில் நான்கு மிளகு போட்டு வைத்தால் ரொட்டி நமத்துப் போகாமல் இருக்கும்.

நாள்பட்ட பிரெட்டை இட்லிப்பானை ஆவியில் வேகவைத்தால், மிருதுவாகிவிடும். ஒரே ஆவியில் எடுக்கவும்.

இனிப்புப் பண்டங்களைச் சுற்றி மஞ்சள்தூள் தூவி வைத்தால் எறும்பு வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்