காஃபி சுவையாக இருக்க...

சனி, 18 பிப்ரவரி 2012 (17:51 IST)
காஃபி சுவையாக இருக்க...

வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும். பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி கஃபி மணக்க ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து, காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து, பாலைக் கெட்டியாக்கி கஃபிக்கு சுவையை‌க் கூட்டும்.

தயிர் பச்சடி செய்யும் போது...

தயிர் பச்சடி செய்யும் போது கடுகு, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு சீரகத்தையும் பொடி செய்து போட்டால் சுவையும் மணமும் கூடும்.

இட்லி மிருதுவாக ருசியாக இருக்க...

இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது, அத்துடன் சிறிது அவல் சேர்த்து ஊறவையுங்கள். இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.

துவரம்பருப்பு வேக வைக்கும்போது...

துவரம்பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை கெட்டுப் போகாமல் இருக்கும் உடம்புக்கும் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்