கறை பட்டவுடன் கழுவினால் கறைகள் மறைந்துவிடும். ஆனால் பல சமயங்களில் கறைகளை நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இதற்குத் தனி கவனம் தேவைப்படுகிறது.
கறைகளை நீக்குவதற்கு முன் செய்ய வேண்டியவை, துணிகளை ஊற வைப்பதற்கான குறிப்புகள் ஆகியவற்றை கீழே காணலாம்.
கறைகளை நீக்குவதற்கு முன்:
மறக்காதீர்கள்! கறைகள் பட்டவுடன் உடனடியாக அதை நீக்கினால் அவை முழுமையாக மறையும் வாய்ப்புண்டு.
உங்கள் உடையின் பாதுகாப்பு விதிகளைப் படித்து கறைகளை நீக்கும் போது உடைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் உபயோகிக்கும் சோப் உங்கள் துணிகளுக்கு ஏற்றதா என்பதை சரி பார்த்து உபயோகிக்க வேண்டும்.
டிட்டர்ஜண்ட், சோப் ஆகியவற்றில் உள்ள குறிப்புகளையும் மறக்காமல் படிக்கவும்.
உங்கள் துணிகளின் நிறம் போகாமல் இருக்குமா என்பதை சரி பார்க்கவும்.
கம்பளி, பட்டு உடைகளுக்கு ப்ளீச் அல்லது ப்ளீச் அடங்கிய டிட்டர்ஜெண்ட் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
அதிகமாக கறை படிந்த துணிகளை ஊற வைத்துத் துவைக்க வேண்டும்.
ஊற வைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை:
உடையின் சாயம் மாறுமா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பட்டு, கம்பளி, தோல் மற்றும் உலோகத்தாலான பொருட்கள் இல்லாத ஆடைகளாக இருக்க வேண்டும்.
சோப் அல்லது டிட்டர்ஜெண்ட் முழுமையாக கரைந்து விட்டதா என்று சரி பார்க்கவும்.
தண்ணீரின் வெப்பத்தை உடை தாங்குமா என்று சரி பார்க்கவும்.
உடைகள் அளவுக்கு அதிகமாக கசங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.
வெள்ளைத் துணிகளை வண்ணத் துணிகளோடு கலந்து ஊற வைக்காமல் தனியாக ஊற வைக்கவும்.
உடைகளின் சாயம் மாறுமா?
உடைகளின் சாயம் போகுமா இல்லையா என்று சந்தேகமாக இருந்தால், துணியின் ஒரு சிறிய பகுதியை நனைத்து, அதன் மேல் வெள்ளை துணி அல்லது டிஷ்ஷு பேப்பர் வைத்து அயர்ன் பண்ணவும். துணியின் நிறம் அதில் பட்டால் துவைக்கும் போது சாயம் அவசியம் போகும்.
சாயம் போகும் துணிகளை எப்படித் துவைப்பது?
ஊற வைக்காமல், தனியாக குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.
சாயம் மாறும் துணிகளை வீட்டில் துவைக்காமல் டிரை கிளீனிங் செய்யலாம்.
உங்கள் வீட்டின் துணிகள் கறையின்றி பளிச்சிட மேலுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்.