1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்? 2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன? 3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன? 4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்? 5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்? 6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்? 7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன? விடைகள்
1. வெங்காயம் 2. மின்விசிறி 3. பொம்மை 4. தையல்காரர் 5. நிழல் 6. படகு 7. வெளவால்