நடப்பு 2010-ம் வருடத்தில் தோன்றும் அனைத்து பெளர்ணமி தினத்தைய நிலவுகளையும் விட உருவத்தில் பெரிதான மற்றும் அதிக பிரகாசமான நிலா இன்று தோன்றுகிறது. இந்த நிலவானது இரவு சுமார் 8 மணிக்கு மேல் முழு அளவில் தெரியும்.
சுற்று வட்டப்பாதையில் நிலாவின் ஒரு பக்கம் மட்டும் பூமிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டர் அருகில் தெரிவதால் இத்தகைய வியத்தகு நிகழ்வு நடைபெறுகிறது. இது நடப்பு ஆண்டில் மற்ற எல்லா பெளர்ணமி தினத்தன்று தோன்றும் நிலவுகளை விட உருவத்தில் சுமார் 15 சதவீத அளவு பெரிதாக தெரியும்.
அதே போன்று சுமார் 30 விழுக்காடு அளவுக்கு அதிகமான வெளிச்சம் உடையதாகவும் காணப்படும். இந்த தகவலை அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான `ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி.தேவ்கன் தெரிவித்தார்.