பூமிக்கு மிக அருகில் எரிகல் செல்கிறது

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (12:38 IST)
இய‌ற்கை‌யி‌ன் அ‌திசய‌ங்க‌ளி‌ல் எ‌த்தனையோ ரக‌சியஙக‌ள் ஒ‌ளி‌ந்‌திரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் எ‌‌ரிக‌ற்களு‌‌ம் ஒ‌ன்று. ‌அள‌வி‌ல் ‌சி‌றிய எ‌ரிக‌ல் ஒ‌ன்று, இ‌ன்றைய ‌தின‌ம் பூ‌மி‌க்கு ‌மிக அரு‌கி‌ல் கட‌ந்து செ‌ல்ல உ‌ள்ளது. வான‌த்‌தி‌ல் ‌நிகழு‌ம் ‌மிக அ‌ரிய கா‌ட்‌சியாகு‌ம் இது.

வானத்தில் அவ்வப்போது அரிய நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். சில சமயங்களில் வானில் இருந்து எரிகற்கள் விழும். மேலும், மிகப்பெரிய பாறைத் துணுக்குகள் பூமி மீது மோதுவது போல வந்து, ‌பிறகு பாதை மா‌றி செ‌ன்று‌ள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. இது தவிர, வெறும் கண்ணுக்கு எளிதில் புலப்படாத வியாழன், வெள்ளி, புதன் போன்ற முக்கிய கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற அற்புதங்களும் ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளன.

இந்த சூழ்நிலையில், வானத்தில் மீண்டும் ஒரு அரிய நிகழ்வு இன்று நடைபெறு இருக்கிறது. மிகவும் சிறிய வடிவிலான எரிகல் ஒன்று, பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்கிறது. அதன் உண்மையான அளவு குறித்து இன்னமும் தீர்மானிக்க முடியவில்லை. எனினும், அது சுமார் 10 மீட்டர் அளவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பூமியில் இருந்து 33 ஆயிரம் மைல் (52 ஆயிரம் கி.மீட்டர்) முதல் 40 ஆயிரம் மைல் (64 ஆயிரம் கி.மீட்டர்) உயரம் வரையிலான பகுதிக்குள் அந்த எரிகல் விண்ணில் மிதந்து செல்லும். பூமியின் மேலே எந்த பகுதியில் அந்த எரிகல் தெரியும் என்பதை விஞ்ஞானிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. எனவே, இந்தியா உட்பட எங்கு வேண்டுமானாலும் அந்த எரிகல் தெரியக் கூடும்.

இந்த தகவல்களை, சிறிய கோள்கள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. `நாசா' விஞ்ஞானிகளும் இதை உறுதி செய்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் அந்த எரிகல் நெருங்க நெருங்க இன்னும் ஏராளமான தகவல்களை வழங்குவதாகவும் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்