விடுகதைக்கு விடை தெரியுமா?

சனி, 4 ஜூலை 2009 (17:03 IST)
விடுகதை கேட்டு அதிக நாட்கள் ஆகிவிட்டன. மீண்டும் பள்ளி திற‌ந்து சம‌ர்‌த்தகா‌ப் படி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் மா‌ணி‌க்க‌ங்களே ம்ம் தயாராகுங்கள் விடுகதையுடன் பள்ளிக்குச் செல்ல

1. பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?

2. அவன் சத்தம் ஓய்வதில்லை, அவன் ஓய்ந்தால் சத்தமில்லை. அவன் யார்

3. மழைக்காலக் குடை ஒன்று மணல் மேட்டில் விரியுது அது என்ன?

4. நீட்டிய நாக்கினால் தீர்த்துக் கட்டுவான் பூச்சிகளை அவன் யார்?

5. தவறால் பிறக்கும் பூ, தவறாகப் பூக்கும் பூ, தண்டிக்கப்படக் கூடிய பூ அது என்ன?

6. எந்த ஆபத்திலும் கூடவே நிற்பான். இருட்டு வந்தால் ஓடி விடுவான் அவன் யார்?

7. பொதுவான நம் வீட்டிற்கு ஒரு குலவிளக்கு. அவன் யார்

விடைக‌ள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்..

விடைக‌ள்

1. தேன்
2. இதயம்
3. காளான்
4. பல்லி
5. தப்பு
6. நிழல்
7. சூரியன்

வெப்துனியாவைப் படிக்கவும்