தனித்திறனை வெளிப்படுத்த புதிய திட்டம்
வியாழன், 7 அக்டோபர் 2010 (12:26 IST)
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக இளம்சிறார் தனித்திறன் திட்டத்தை பள்ளிக் கல்வி இயக்க்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரிடம் மறைந்துள்ள தனித்திறன்களை வெளியில் கொண்டு வருவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பள்ளிகளில் 6, 7, 8,ம் வகுப்புகளை ஒரு பிரிவாகவும், 9, 10 ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது. மேற்கண்ட மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, இசைப் போட்டி, வினாடி வினா போட்டி, நாட்டுப்புற நாட்டியம், பாடல்கள் ஆகியவை நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவ, மாணவியரின் தனித்திறன்களை வெளியில் கொண்டு வருவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த போட்டிகடிளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை காட்டலாம். இந்த மாதம் பள்ளிகள் அளவில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. நவம்பர் மாதம் மாவட்ட அளவில் நடத்தப்படும். டிசம்பர் மாதம் திருவாரூரில் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.