செவ்வாய், 9 ஜூன் 2009 (15:10 IST)
அகமதாபாத்தின் சிறப்புப் பற்றிப் பார்த்திருக்கிறோம். அதுபோல் இந்த வாரம் கொல்கட்டாவிற்கு என்று இருக்கும் தனிச்சிறப்புகளைப் பார்க்கலாம்.
தற்போது கொல்கட்டா என்றழைக்கப்படும் இந்த நகரம் முன்பு கல்கத்தா என்று இருந்தது.
இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கட்டாவில்தான் தொடங்கப்பட்டு, முதல் செய்தித்தாள் வெளியானதும் கொல்கட்டாவில்தான்.
கொல்கட்டாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
ஹூக்ளி நதியின் மீது ஹெளரா - கொல்கட்டா நகரங்களை இணைக்கக் கட்டப்பட்டுள்ள ஹெளரா பாலம் மிகப் பழமையானது. 1943ல் இது திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் தபால் நிலைய அலுவகமும் கொல்கட்டாவில்தான் உள்ளது.
பிர்லா கோயில், ஜெயின் கோயில் ஆகியவை கொல்கட்டாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும்.
அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கட்டா.
இந்தியாவின் பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் அமைந்துள்ள நகரம்.
பிரபலமான எழுத்தாளர் கட்டடம் அமைந்துள்ளது கொல்கட்டாவில்தான்.