உணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்

திங்கள், 10 மே 2010 (16:22 IST)
உணவு‌க்கு‌ம், ப‌சி‌க்கு‌ம் ‌நிறைதொட‌ர்‌பிரு‌க்‌கிறது. அதப‌ற்‌றி ‌நிறைபழமொ‌ழிகளு‌‌மஉ‌ள்ளன. ஒ‌வ்வொ‌ன்று‌மஅனுப‌வி‌த்து‌ககூற‌ப்ப‌ட்வா‌ர்‌த்தைகளாகு‌ம்.

குழ‌ந்தைகளபழமொ‌ழியை‌பபடி‌ப்போமா?

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

உ‌ப்‌பி‌ல்லாப‌ண்ட‌மகு‌ப்பை‌யிலே.

உ‌ண்ட ‌வீ‌ட்டு‌க்கரெ‌ண்டக‌மசெ‌ய்யாதே.

உ‌ண்டி சுரு‌ங்‌கி‌னபெ‌ண்டிரு‌க்கஅழகு.

கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல.

பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.

கூழானாலும் குளித்துக் குடி.

சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?

வெப்துனியாவைப் படிக்கவும்