ஆமை ‌ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்

புதன், 18 நவம்பர் 2009 (16:46 IST)
ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும்.

நிலத்தில் வாழும் ஆமைக்கு கால்களில் நகங்கள் அமைந்திருக்கின்றன. ஆமை தரையில் நடக்கும் வேகம் மணிக்கு சுமார் 70 மீட்டர். கட‌லி‌ல் வாழு‌ம் ஆமை வகைக‌ளி‌ன் கா‌ல்களே துடு‌ப்பு போ‌ன்று அமை‌ந்‌திரு‌க்கு‌ம். கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடும்.

இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளன.
இவற்றில் சில இனங்கள் அழிவாபத்தை எதிர்கொள்கின்றன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்கிறது.

பொதுவாக உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ஆமைகளு‌க்கு ‌நீ‌ண்ட ஆயு‌ள் உ‌ள்ளது. அத‌ன் இதய‌ம் ‌மிகவு‌ம் ‌நிதானமாக‌த் துடி‌ப்பதே அத‌ன் ‌நீ‌ண்ட ஆயுளு‌க்கு‌க் காரணமாக அமை‌கிறது.

ஆமைக‌‌ள் மு‌ட்டை‌யி‌ட்டு கு‌ஞ்சு பொ‌ரி‌க்கு‌ம் இன‌த்தை‌ச் சே‌ர்‌ந்தது. கட‌லி‌ல் வாழு‌ம் பெ‌ண் ஆமைக‌ள், கரு‌த்த‌ரி‌த்தது‌ம், கட‌ற்கரையை நோ‌க்‌கி கூ‌ட்டமாக பய‌ணி‌க்க‌த் துவ‌ங்கு‌ம். கரையை அடை‌ந்தது‌ம் ம‌ண்‌ணி‌ல் கு‌ழி தோ‌ண்டி மு‌ட்டைகளை இ‌ட்டு‌வி‌ட்டு செ‌ன்று‌விடு‌கி‌ன்றன. ஒ‌வ்வொரு கட‌ல் ஆமையு‌ம் 200 மு‌ட்டைகளை ஒரே சமய‌த்‌தி‌ல் கூட இ‌ட்டு‌விடு‌ம்.

கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை.

மிகச்சிறிய ஆமையாக கருதப்படும் 110 மி.மீ., கொண்ட "ஸ்டிங்காட்' ஆமையானது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ளன. மற்ற ஐந்து வகை ஆமைகள் இந்திய கடற்பகுதியில் வாழ்கின்றன. பேராமை, சித்தாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என்பவை அவற்றின் பெயராகும்.

பெருந்தலை ஆமையை தவிர மற்ற வகை ஆமைகள் மட்டுமே இந்திய கடற்கரை பகுதியில் முட்டையிடும். நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். இதில், சித்தாமைகள் அதிக அளவில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்கு கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் தான் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சித்தாமைகள் தமிழகம், ஆந்திர கடலோரப் பகுதியை கடந்து செல்கின்றன.

பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்