‌விடுகதை‌க்கு ‌‌விடை தேடு‌ங்கள்!

வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:31 IST)
விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா பாரு‌ங்க‌ள் குழ‌ந்தைகளா... இ‌ல்லையெ‌ன்றாலு‌ம் பரவா‌யி‌ல்லை. ‌விடையு‌ம் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்‌க‌ளிட‌ம் இ‌ந்த‌க் கே‌ள்‌விகளை‌க் கே‌ட்டு அச‌த்து‌ங்க‌ள்.

ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது.

தேசப்படம்.

காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான். அவன் யார்?

முருங்கை மரம்

யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான்?

நிழல்

விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?

சேவல்

இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்?

அவர்கள் யார்

நட்சத்திரங்கள்

மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு அது என்ன?

கூடு

வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் அவன் யார்

வாழை இலை

இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?

கடல்

வெப்துனியாவைப் படிக்கவும்