‌விடுகதைகளை பாரு‌ங்க‌ள்

புதன், 10 நவம்பர் 2010 (16:36 IST)
குழ‌ந்தைகளு‌க்கு ‌விடுகதைக‌ள் சொ‌ல்‌லி அ‌திக நா‌‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டன. பு‌திதாக வ‌ந்‌திரு‌க்கு‌ம் ‌விடுகதைகளை‌ப் பாரு‌ங்க‌ள்.

ச‌ரி இதோ கே‌ள்‌‌விக‌ள் :

1. சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?
2. கோடையில் சுற்றி வரும்; வாடையில் முடங்கி விடும். அது என்ன?
3. கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
4. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?
5. கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்?
6. கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?
7. குட்டிப் போடும். ஆனால் எட்டிப் பறக்கும். அது என்ன?

விடைக‌ள்

1. வெங்காயம்
2. மின்விசிறி
3. பொம்மை
4. தையல்காரர்
5. நிழல்
6. படகு
7. வெளவால்

வெப்துனியாவைப் படிக்கவும்