உ‌யி‌ரின‌ங்களை‌ப் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்

செவ்வாய், 24 பிப்ரவரி 2009 (10:17 IST)
ப‌ல்வேறு உ‌யி‌ரின‌ங்க‌ள் ப‌ற்‌றிய ப‌‌ல்வேறு‌த் தகவ‌ல்க‌ள் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளன. உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த தகவ‌ல்களையு‌ம் இ‌ங்கு அ‌ளி‌க்கலா‌ம் குழ‌ந்தைகளே!

மின்மினிப் பூச்சியின் முட்டையும் ஒளி வீசும் தன்மை கொண்டது.

பறக்காத பறவை பெங்குவின் கடல் கோழி என்று அழைக்கப்படுகிறது.

பாம்பே டேக் என்பது ஒரு வகை மீனின் பெயராகும்.

கடல் ஆமைக்கு மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

ஆண் குதிரைக்கு 36 பற்கள் உண்டு.

யானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.

மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.

நீர்வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கலம்தான். எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். சுமார் 260 பற்கள்.

விலங்குகளில் அதிக பற்கள் உடையவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்குமாம். அம்மாடியோவ்

மீன்களின் அரசன் என்று அழைக்கப்படுவது சுறா மீன்.

ஒட்டகச்சிவிங்கி நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவை விடப் பெரியதாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்