ஆங்கில இலக்கணத்தில் தமிழக ‌சிறா‌ர்க‌ள் அபாரம்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (12:58 IST)
தே‌சிய க‌ல்‌வி ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌ம் ப‌யி‌ற்‌சி மைய‌ம் (எ‌ன்.‌சி.இ.ஆ‌ர்.‌டி.) சா‌ர்‌பி‌ல் நடைபெ‌ற்ற பு‌ரி‌ந்துகொ‌ள்ளு‌ம் ‌திறனை வெ‌ளி‌ப்படு‌த்துவத‌ற்கான தே‌ர்‌வி‌ல், ஆ‌ங்‌கில இல‌க்க‌ண‌த்‌தி‌ல் த‌மிழக ‌சிறா‌ர்க‌ள் ‌சிற‌ந்த இட‌த்தை‌ப் ‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

என்.சி.இ.ஆர்.டி. நடத்திய புரிந்துகொள்ளும் திறன் தேர்வை எழுதிய சிறுவர்களில் புரிந்துகொள்ளும் திறனை வெளிப்படுத்துவதில் புதுச்சேரி மாணவர்கள் 40 சதவீதத்துக்கும் கீழே உள்ளனர். மொழிப் பாடத்தை பொறுத்தவரை தமிழகம், மேற்கு வங்கம், மிசோரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 51 முதல் 55 சதவீத சிறா‌ர்கள் 80 முதல் 100 சதவீத புரிந்துகொள்ளும் திறன் பெற்றுள்ளனர்.

கட்டுரை வாசித்தலில் மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழகம் 79.19 சதவீதம் பெற்று சிறந்த இடத்தை பிடித்துள்ளது. ஆங்கில இலக்கணம் மற்றும் பயன்பாட்டில் தமிழக சிறுவர்கள் சிறந்த இடத்தை பெற்றுள்ளனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்