பட்ஜெட்டை தயாரிப்பது யார்?

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (17:46 IST)
webdunia photoWD
அரசியல்வாதிகளாகளும், பொருளாதார நிபுணர்களாகவும் உள்ள பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இவர்களுடன், பல நிபுணர்கள் இணைந்து பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் நிதித் துறை செயலாளர் டி.சுப்பாராவ், வருவாய்த் துறை செயலாளர் பி.ி.பிட்டி, செலவினத் துறை செயலாளர் சஞ்சீவ் மிஸ்ரா ஆகியோருடன், நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் வீர்மனி, நிதி அமைச்சரின் ஆலோசகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுபாஷிஸ் கங்கோபாத்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் டி.சுப்பாராவ் பொருளாதார நிபுணர். இவர் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்துள்ளார். இவர் முன்பு பட்ஜெட் தயாரிப்பு பணியில் இருந்துள்ளார். மற்றவர்கள் பட்ஜெட் தயாரிப்பு குழுவில் புதியவர்கள்.

பணவீக்கம் அதிகரிக்கும் அதே நேரத்தில் முக்கியமான தொழில் துறைகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. அத்துடன் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் இந்த சமயத்தில் பொருளாதார மேதைகளான கங்கோபத்யா,வீர்மணி ஆகிய இருவரின் பங்கும் பட்ஜெட் தயாரிப்பில் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும்.

webdunia photoWD
சென்ற வருடம் ஜீன் மாதம் நிதித்துறை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பி.ி.பிட்டி நேரடியாக பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடுவது இதுவே முதன் முறை. இவர் முன்பு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்ட டிஸ்இன்வெஸ்ட்மென்ட் துறையின் செயலாளராக இருந்துள்ளார். நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகமாக இருப்பதால் இவரின் பணி எளிதாக இருக்கும்.

அடுத்த வருடம் பொதுத் தேர்தல்களை சந்திக்க வேண்டும். இதனால் தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் அறிவிப்புகளை வெளியிடும். இவை எல்லாம் பொருளாதார ரீதியாக சாத்தியம் தானா என்பதை ஆராயவும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதும் மிகவும் சிரமான பணி. இந்த சவலாலை மிஸ்ரா சந்திக்க வேண்டும். இவர் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதுடன், நிதி ஓதுக்கீட்டிற்கும் வழி காட்ட வேண்டும். இவர் ஒவ்வொரு அமைச்சரகமும் கேட்கும் ஒதுக்கீடை ஆராய்ந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவர் ரூ.5 லட்சம் கோடி செலவினத்திற்கு திட்டமிட வேண்டும். இதில் சுமார் 80 விழுக்காடு வட்டி, மாணியங்கள், அரசு ஊழியர்களின் சம்பளம், மாநிலங்களுக்கு ஒதுக்கீடு போன்றவைகளுக்கே சரியாகிவிடும். மீதம் உள்ள 20 விழுக்காடு தான் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நிதி சேவை துறையின் செயலாளராக இருக்கும் அருண் ராமனாதனின் பணியும் கடுமையானதுதான். வங்கி, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற துறைகளில் தனியாரை அனுமதிப்பது, அந்நிய நேரடி முதலீடு அனுமதி ஆகியவை ஏற்கனவே அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. அத்துடன் விவசாயம் போன்று ஒவ்வொரு துறைகளுக்கும் கடன் போன்றவைகளை அறிவிக்க வேண்டும்.

பொருளாதார துறைக்கான இணை செயலாளர் எல்.எம்.வியாஸ் பணிதான், சிறிது சுலபமானது என்று கூறலாம். இவர் நேரடி வரி, மறைமுக வரி போன்ற அரசின் வருவாய் இனங்களில் வருந்துள்ள வருவாய், மற்றும் செலவுகளை வகைப்படுத்தி அரசின் வரவு-செலவு அறிக்கையை தயாரிக்க வேண்டும். இதில் சென்ற பட்ஜெட்டின் மதிப்பீடு, இது வரையிலும் கிடைத்துள்ள வருவாய், மறு மதிப்பீடு போன்றவைகளை தயாரிக்க வேண்டும்.

webdunia photoWD
நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ள இறுதி பட்ஜெட்டை அச்சடிக்கும் பணியும் இவரையே சாரும். நாடாளுமன்ற வடக்கு பிளாக்கில் இருக்கும் அச்சகத்தில் தான் பட்ஜெட் அச்சடிக்கப்படும். இதன் பாதுகாப்பு பணியை இன்டலிஜென்ஸ் பீரோ என அழைக்கப்படும் புலனாய்வு துறை எடுத்துக் கொள்ளும். மத்திய அமைச்சர்கள் கூட, பட்ஜெட் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் சில நிமிடங்கள் முன்பு வரை பார்க்க முடியாது. அந்த அளவு பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

இதற்கு முன் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சலுகை அல்லது வரி விதிப்பு, வரி குறைப்பு, கொள்கை முடிவு போன்ற தகவல்கள் எல்லாம் அனுமானங்கள்தான்.