பட்ஜெட் : பெ‌ண்களே நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

நாட்டின் பட்ஜெட்டை வேண்டுமானால் நிதி அமைச்சர் போடலாம். வீட்டின் பட்ஜெட்டை போடுபவர்கள் நீங்கள் தானே.

குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு, தலை சுற்றும் புள்ளி விபரங்களை அலசி, சுற்றிலும் நிபுணர்கள் புடைசூழ நிதி அமைச்சர் பட்ஜெட்டை தயாரிப்பார்.

அவரின் அறிவிப்புக்களால் முதலில் பாதிக்கப்படுவது யார் ?

இல்லத்தரசிகளே நீங்கள் தான்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.25 விலை உயர்த்தினால் கூட பாதிக்கப்படுவது நீங்கள்தான். இதேபோல் சமையல் எண்ணெய் உட்பட ஒவ்வொன்றுக்கும் இறக்குமதி வரி, உற்பத்தி வரி, விற்பனை வரி, கூடுதல் வரி என ரயில் வண்டி தொடர் போல் வரிகள்.

இது போல் இன்னும் எத்தனை எத்தனையோ...................

இதனால் முதலில் பாதிக்கப்படுவது குடும்பத்தை நிர்வகிக்கும் நீங்கள் தான்.

வருமானம் அதிகரிப்பதில்லை. அதே நேரத்தில் பால், மளிகை பொருட்கள், வீட்டு வாடகை, குழந்தைகளுக்கு படிப்பு செலவு, மருந்து விலை என எல்லாம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒவ்வொரு மாதமும் குடும்ப பட்ஜெட் போடுவதற்குள் உங்களுக்கு தலை கிருகிருத்து போய்விடுகிறது.

இந்த லட்சணத்தில் எதிர்கால செலவுக்காக வேறு சேமிக்க வேண்டுமாம்!

நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அரசுகள் போடும் பட்ஜெட், உங்களை விட்டு வைக்காது.

இதனால்தான் பட்ஜெட்டில் உங்களுக்கு என்ன சலுகை வேண்டும்.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கு நிதி அமைச்சர் என்ன செய்ய வேண்டும்?

நிதி அமைச்சருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
அவரிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன ?

எங்கள் இணைய தளத்தில் உங்கள் ஆலோசனைகளை பதிவு செய்யுங்கள். இச்செய்தியின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உங்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

இணைய தளத்தில் தட்டச்சு செய்ய முடியாதவர்கள் ஆங்கிலம், அல்லது தமிழில் உங்கள் கருத்துக்களை வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் மட்டும் எழுதி கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது கூரியரில் அனுப்பலாம்:

ஆசிரியர்,
தமிழ்.வெப்துனியா.காம்,
வெப்துனியா.காம் (இந்தியா)பிரைவேட் லிட்.,
2, கிருபா சங்கரி தெரு,
மேற்கு மாம்பலம்,
சென்னை-600 033.
மின்-அஞ்சல் : [email protected]t

வெப்துனியாவைப் படிக்கவும்