அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்ற கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரன், அதிமுகவை கைப்பற்றும் வரை தான் அமமுக என்ற கட்சியை நடத்த போவதாகவும், அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றிய பின்னர் அமமுகவை கலைத்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவும், அமமுகவும் இணையப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்றும், சசிகலா மற்றும் தினகரனை தவிர வேறு யாரையும் தலைமையாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் ஒருவரான வெற்றிவேல் தெரிவித்துள்ளார். இருப்பினும் என்ன நடக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்