காங்கிரஸ் வீழ்வதை பார்க்க முடியாது; கட்சி கைமாறும்: சோனியா காந்தி!

சனி, 10 மார்ச் 2018 (17:27 IST)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பிரமதர் ஆசை குறித்தும், தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து, வரும் நாட்களில் கட்சியின் நிலை குறித்தும் பேசியுள்ளார். அவை பின்வருமாறு...

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சோனியா காத்து விளக்கினார். மேலும் அந்த பதவியில் அவரது மகன் ராகுல் காந்தியை அமர்ந்தார். மேலும் கட்சியின் சில அடுத்த நகர்வுகளை பற்றி அவர் கூறியதாவது.
 
நான் பிரதமர் ஆவது குறித்து எப்போதும் நினைத்ததில்லை.  அப்படிப்பட்ட நினைப்பே எனக்கு வரவில்லை. காங்கிரசில் சிறந்த தேர்வாக இருந்தது மன்மோகன் சிங். எனவேதான், நான் பிரதமராகமல் மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். 
 
அதேபோல், காங்கிரஸ் கட்சி தவறான திசையில் செல்வது போல உணர்ந்த்ந்ந்ன். காங்கிரசின் வீழ்ச்சியை என்னால் பார்க்க முடியாது. மேலும், சில விஷயங்களில் என்னால் தைரியமாக முடிவெடுக்க முடியவில்லை. இதனால் தலைவர் பதவியில் இருந்து விலகினேன் என பேசியுள்ளார். 
 
மேலும், நேரு குடும்பம் மட்டுமே காங்கிரஸ் கிடையாது. .எங்கள் கட்சியில் நிறைய முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அடுத்த தலைவர் ஆவார். எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் குடும்பத்தில் இல்லாத ஒருவர் தலைவராக நிச்சயம் வருவார் என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்