திமுக தலைவர் ஸ்டாலினை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?
திங்கள், 11 பிப்ரவரி 2019 (21:47 IST)
அம்பானியின் நிறுவனங்களுக்கு மத்திய பாரதிய ஜனதா அரசு பல்வேறு சலுகைகளை செய்து தருவதாக காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியான திமுகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொழிலதிபர் முகேஷ் அம்பானி சந்தித்தார்.
முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி - அனந்த் பிரமல் ஆகியோரின் திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கோலாகலமாக நடைப்பெற்ற நிலையில், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் வரும் மார்ச் 9ம் தேதி நடைப்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க திமுக தலைவரை முகேஷ் அம்பானி சந்தித்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இந்த சந்திப்பு எதனால் என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.