ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட ராட்சத முதலை: எவ்வளவு எடை தெரியுமா?

புதன், 11 ஜூலை 2018 (18:20 IST)
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்துள்ளனர்.

 
 
ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் காத்ரீன் நதி உள்ளது. இந்த நதியை ஒட்டி பொதுமக்கள் வாழுந்து கொண்டிருகின்றனர். இந்த நதியில் 600 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஒன்று உள்ளது. 
 
இந்த ராட்சத முதலை அடிக்கடி நதியில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று விடுகிறது. இதனால் அங்குள்ளவர்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
 
இதனையடுத்து, சுற்றுலா துறையினர் அந்த முதலையை உயிருடன் பிடித்தனர். அப்போது அந்த முதலை கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவது அவர்களுக்கு தெரியவந்தது. சுமார் 5 மீட்டர் நீளமும், 600 கிலோ எடையும் உள்ள அந்த முதலை தற்போது அங்குள்ள முதலை பண்ணையில் விடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்