ஆஸ்திரேலியா போன்று எங்களை எண்ண வேண்டும்; எச்சரிக்கும் இங்கிலாந்து கேப்டன்

செவ்வாய், 3 ஜூலை 2018 (16:02 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இன்று இரவு டி20 தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 
 
இந்நிலையில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ஆஸ்திரேலியா போன்று எங்களை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 6 போட்டிகளிலும் வென்றது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலிய அணி அதன் கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இங்கிலாந்து அணியை இந்திய வென்றாக வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்பில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்