ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. மாநில அமைச்சர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது
ஜெயலலிதா மறைவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாக இருந்தனர். ஆனால் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், துணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்-ம் உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி ஓபிஎஸ் எந்தவிதமான வாக்குமூலத்தை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.