மோடிக்குக் எதிராக பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்: முழு ஃபார்மில் திமுக

வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:55 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்விக்கு பின்னர் திமுகவினர் ஃபுல்பார்மில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் உள்ளனர். குறிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனையில் திமுகவின் போராட்டம்தான் ஊடகங்களின் தலைப்பு செய்தியாக உள்ளது
 
தற்போது ஒருபக்கம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைப்பயணம் மூலம் மக்களை எழுச்சியுற செய்து வரும் நிலையில் இன்னொருபுறம் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இன்று பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் சென்னையில் திமுக எம்.எல்.ஏ மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. MODI GO BACK என்ற வாசகம் அடங்கிய இந்த பலூனை பறக்கவிட்டு ஹெலிகாப்டரில் செல்லும் பிரதமருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பலூன் பிரமாண்டமாக பறந்து திமுகவினர்களை பெருமிதம் அடைய செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்