இப்போது வந்த ஜெயலலிதா அப்போது வரவில்லையே ஏன்? அன்புமணி விளாசல்

திங்கள், 9 மே 2016 (06:25 IST)
தற்போது, தேர்தலுக்காக வாக்கு கேட்டு வரும் ஜெயலலிதா, அப்போது, சுனாமி, தானே புயல், வெள்ளம் ஆகியவை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட போது  கடலூர் மாவட்டத்திற்கு வரவில்லையே ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக முதலமைச்சர் வேட்பாளர்  அன்புமணி ராமதாஸ், கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பழ.தாமரைகண்ணனை ஆதரித்து தேரடி வீதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசுகையில், தேர்தலுக்காக வாக்கு கேட்டு வரும் ஜெயலலிதா, அப்போது, சுனாமி, தானே புயல், வெள்ளம் ஆகியவை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட போது  கடலூர் மாவட்டத்திற்கு வரவில்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அத்துடன், கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் குரல் கொடுத் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் அதிமுகவை சேர்ந்த இந்த 37 எம்பிக்களும்.
 
எனவே, உங்கள் மீதும் உங்கள் மாவட்டம் மீதும் அக்கறை இல்லாத ஜெயலலிதாவை நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்