இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, மேலும், திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவல் நடிகர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, அரசியல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பாத நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு தனது தரப்பின் சார்பில், ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டார். அதில், சட்ட மன்ற தேர்தலில் 'இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம்' எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது ரசிகர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு விருப்பம் போல் வாக்களிக்கலாம் என்று கூறியுள்ளார்.