ஓட்டு போட்டால் பரிசு: தேர்தல் அதிகாரி தகவல்

திங்கள், 21 மார்ச் 2016 (11:19 IST)
கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் வாக்களித்தால், வாக்களர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.


 

 
தமிழகத்தைப் போலவே கேரள மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள வாக்களர்கள் வாக்களிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
எனவே, தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.
 
அதன்படி, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர் புதிய பரிசுத் திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
 
தேர்தலுக்கு பின்னர், குலுக்கல் நடத்தி, தேர்ந்தெடுக்கப்படும் வாக்காளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்குப் பணம், அன்பளிப்புப் பொருட்களைக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், வாக்காளர்களை வாக்களிக்க வைப்பதற்காக தேர்தல் ஆணையமே, பரிசுத் திட்டத்தை அறிவித்திருப்பது விநோதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்