வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தமிழருவி மணியன்

செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (03:20 IST)
வைகோ தனது முடிவை  மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையில்,  மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மிகப்பெரிய பலம் அவருடைய போர்க்குணமும் கடுமையான உழைப்புமே. அதே நேரத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படுவதும் வைகோவின் பலவீனமாமக பார்க்கப்படுகிறது.
 
ஆறு மாதங்கள் விளைநிலத்தில் கடுமையாக உழைத்து வியர்வை சிந்திய விவசாயி அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் வெளியூர் சென்று தங்கி விடுவது போன்று, ஆண்டுக்கணக்கில் மக்கள் பிரச்சினைககாக போராடிவிட்டு, தற்போது தேர்தல் நேரத்தில் தேவையற்ற உணர்வுக்கு ஆட்பட்டுள்ளார்.
 
இதனால், தனக்கும், தன்னால் உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணிக்கும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய முடிவாகும். இது அவரது அரசியல் வாழ்வுக்கு எதிரான மிகப்பெரிய பின்னடைவு ஆகும்.
 
வைகோ தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து விடக் கூடாது என்பதில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருக்கும் ஒத்த கருத்து உடையவர்கள். ஆனால், வைகோவே தற்போது தனது வீழ்ச்சிக்குத் தானே வழிவகுத்துக் கொண்டுள்ளார் என்பது கசப்பான உண்மை. எனவே, வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்