அதிமுக முன்னிலை : தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

வியாழன், 19 மே 2016 (10:00 IST)
தமிழகத்தின் சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக முன்னனிலை வகித்து வருவதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. அதில் துவக்கும் முதல் திமுக முன்னனியில் இருந்தது. ஆனால் போகப் போக அதிமுக ஏறு முகம் காட்டியது. 
 
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. அதிமுக 120 தொகுதியிலும், திமுக 77 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது.
 
இது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வெற்றி பெறுவது உறுதி என்ற மனநிலைக்கு வந்துள்ள அவர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்று அவர்கள் முழக்கம் இட்டு வருகின்றனர்.

பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

வெப்துனியாவைப் படிக்கவும்