சென்னை, ஆர்..கே.நகரில் தற்போதைய முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெல்வாரா என ஜூனியர் விகடன் கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, ஆர்.நகரில் தற்போதைய முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெல்வாரா என்ற கேள்விக்கு, ஜூனியர் விகடன் கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. இதில், 49 சவீதம் ஆதரவு பெற்று, முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெறுகிறார். ஜெயலலிதாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் சிம்லா முத்துச் சோழன் 34 சதவீத வாக்குகளையும், மக்கள் நலக் கூட்டணி சார்பில் நிற்கும் கல்வியாளர் வசந்திதேவி 10 சதவீத ஆதரவும், பாஜக வெறும் 3 சதவீத ஆதரவும் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.