தேர்தல் முடிவு : அதள பாதளத்திற்கு போன சன் டிவி பங்குகள்

வியாழன், 19 மே 2016 (12:53 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் முடிவு, சன் டிவியின் பங்கு வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது.


 

 
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. 139 இடங்களில் அதிமுகவும், 99 இடங்களில் திமுகவும் முன்னிலை வகித்து வருகிறது. எனவே, இந்த முறை ஆட்சி அமைப்பது அதிமுக என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
 
இந்நிலையில், திமுகவின் விழ்ச்சியின், சன் டிவி பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது.
 
சன் டிவியின் பங்கு, இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 11.56 சதவீதம் விலை குறைந்து ரூ.378.40க்கு விற்பனையானது. 
 
இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், திமுகவே பெரும்பாலான இடங்களைப் பெறும் என்று தெரிவித்தன. இதனால் சன் டிவியின் பங்கு 10.3 சதவீதம் அதிகரித்தது.
 
ஆனால், இன்று தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து சன் டிவியின் பங்கு மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்