தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழச் செல்வன், திமுக வேட்பாளர் மூக்கையாவை 196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஏற்கனவே, 2001 ஆண் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது வேட்புமனு தள்ளுபடியான நிலையில், மாற்றுவேட்பாளரான தங்கதமிழ்ச்செல்வனுக்கு அதிர்ஷடம் அடித்தது. திமுக வேட்பாளர் ஆசையனை காட்டிலும் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில், திமுக வேட்பாளர் மூக்கையாவை விட 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.