தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி, கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடியை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் அருகே உள்ள செங்கப்பள்ளியில் இன்று அதிகாலை நேரத்தில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பேது கண்டெய்னர் லாரிகள் வரிசையாக வந்தது. அதை மடக்கி, சோதனையிட்டர். அதில், கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அந்த கண்டெய்னர் லாரிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், ரூ 195 கோடிக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், மீதி பணத்திற்கு இதுவரை ஆவணங்கள் இல்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.