திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

வியாழன், 7 ஏப்ரல் 2016 (13:14 IST)
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கான இட ஒதுக்கீடு முடிவாகியுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார்.
 
இந்த சந்திப்பிற்குப் பிறகு புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதை கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்து உறுதிபடுத்தினார். எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்