கோவைக்கு எடுத்துச் செல்லப்படும் கண்டெய்னர் பணம் ரூ.570 கோடி

திங்கள், 16 மே 2016 (18:24 IST)
கண்டெய்னரில் எடுத்துவரப்பட்டு, திருப்பூரில் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த ரூ.570 கோடி கோவைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


 

 
திருப்பத்தூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட ரூ.570 கோடி, சமீபத்தில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அந்த கண்டெய்னர் லாரிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், அங்கு ராணுவ பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும், ஆந்திராவில் உள்ள வங்கிக்கு எடுத்து சென்றதாக வங்கி அதிகாரிகள் கூறியிருந்தனர். மேலும், அதற்கான ஆதரங்களையும் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அளித்தனர்.
 
அந்த மூன்று கண்டெய்னர் லாரிகளையும் கோவைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அளித்துள்ள ஆவணங்களை சரிபார்த்து, கண்டெய்னரில் இருக்கும் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேர்தல் ஆணையம் திருப்தி அடைந்தால், அதன்பின் அந்த பணம் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்