தமிழகத்திலேயே சென்னையில்தான் குறைந்தபட்ச வாக்குப்பதிவு

திங்கள், 16 மே 2016 (20:23 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தமிழகத்திலேயே சென்னையில்தான் குறைந்த பட்ச வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 
 
தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
 
மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. அதற்கடுத்து, மதியம் 3 மணி நிலவரப்படி 63.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
மாலை ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. தமிழகத்தை பொறுத்தவரை மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், தமிழகத்திலேயே சென்னையில்தான் மிகவும் குறைந்த பட்ச வாக்குப்பதிவு நடந்துள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “வழக்கம்போல் இந்த முறையும் கிராமப்புறங்களில் அதிக அளவும், நகர்புறங்களில் குறைவான வாக்குப்பதிவும் நிகழ்ந்துள்ளது. சென்னையில்தான் குறைந்த பட்ச வாக்கு பதிவாகியுள்ளது. மாலை 3 மணிக்கு பிறகுதான் வாக்குப்பதிவு குறைந்து காணப்பட்டது.
 
மற்றபடி இந்த தேர்தலில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்துள்ளது” என்று கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்