நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மொத்தம் 41 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, முதல்கட்டமாக 33 பேர் கொண்ட பட்டியலை டெல்லி காங்கிரஸ் தலைமை சற்று முன்பு வெளியிட்டது.
ஆனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மைலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருக்கும், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிறுத்தப்படுவார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், குஷ்பு பெயர் வெளியாகவில்லை.